10-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 24ம் திகதி, ரபியுல் அவ்வல் 1ம் திகதி, 10-11-2018 சனிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 11:22 வரை; அதன்பின் சதுர்த்தி திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 11:33 மணி வரை; அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.
மேஷம்:
பொது இடங்களில் நிதானமுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். லாபம் சுமார். குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.
ரிஷபம்:
உறவினர் உதவி கண்டு மனம் நெகிழ்வீர்கள். விடாமுயற்சியால் முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
மிதுனம்:
மனதில் உற்சாகம் மேலோங்கும். திட்டமிட்ட பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
கடகம்:
யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.
சிம்மம்:
சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். சுயகவுரவத்தை பாதுகாக்க முயல்வீர்கள். தொழிலில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க வேண்டாம்.
கன்னி:
நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.
துலாம்:
சிலரது விமர்சனத்தால் மனவருத்தம் ஏற்படலாம். லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் நற்பெயர் பெற முயல்வர்.
விருச்சிகம்:
மனஉறுதியுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழில் அபிவிருத்திக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். லாபம் உயரும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க அனுகூலம் உண்டு.
தனுசு:
அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அக்கறையுடன் பணிபுரிவது அவசியம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பிள்ளைகளின் நற்செயல் பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும்.
மகரம்:
சவால்களை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். பலரும் வியந்து பார்க்கும் விதத்தில் வளர்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். வருமானத்தால் சேமிப்பு உயரும். அரசியல்வாதிகள் பொறுப்பான பதவி பெற வாய்ப்பு உருவாகும்.
கும்பம்:
மதிநுட்பத்துடன் பணிபுரிந்து வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும்.
மீனம்:
அறிமுகமில்லாதவரால் வீண்சிரமம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஏற்படுகிற குளறுபடியை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்