ஆந்திர மாநிலம் டோகாலாபல்லி கிராமத்தில் பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபானம், குட்கா, பான் பராக் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதிப்பது வழக்கம். அந்த வகையில் சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் 2 மணி மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், எவராலும் எந்த ஒரு அமைப்பாலும் யூகிக்க முடியாத அளவிற்கு ஆந்திர மாநிலத்தின் டோகாலாபல்லி கிராமத்தில் பெண்கள் பகல் நேரத்தில் நைட்டி அணியக் கூடாது என புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு படி, பெண்கள் மாலை 6 மணி முதல் காலை 8 மணி நேரம் மட்டுமே நைட்டி அணிய வேண்டும் என்றும், நைட்டி அணிந்து சாலைகளில் வரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறும் பெண்களுக்கு 2000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும், தடை மீறும் பெண்களை காட்டி குடுப்பவர்களுக்கு 1000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.