யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களது உரிமைகள், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வலியுறுத்தும் வகையிலேயே செயற்படுவார்கள் என யாழ்.பல்கலைகழகத்தின் அனைத்துபீட முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்னமேனன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைகழகத்தின் கடந்த ஆண்டுக்கான மாணவர் ஒன்றியத்தின் பதவிக் காலமானது இன்றை தினம் நண்பகலுடன் நிறைவடைந்திருந்தது. இதன்போது இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களுடைய பிரிதிநிகள் தவறவிடும் போது யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அதனை சுட்டிக்காட்டுவார்கள். அத்துடன் அது தொடர்பாக மக்களுக்கும் தெளிவுபடுத்துவார்கள். அதேபோன்று எமது கோரிக்கைகள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கைகளாகவே எப்போதும் அமைந்திருக்கும். அவ்வாறான எமது கோரிக்கைகளை மக்கள் பிரதிநிகளாகிய நீங்கள் கவனமெடுக்கவே வேண்டுமே தவிர தட்டிக்கழிக்க கூடாது. அதேபோன்று மாணவர்கள் முன்னெடுக்க நியாயமான போராட்டங்களுக்கு நீங்கள் ஆதரவு வழங்காது விடினும், அவற்றிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்பதை கூறிக்கொள்கின்றோம்.
யாழ்.பல்கழைகமானது ஒரு சமூகத்தின் குரலாகவே செயற்பட்டு வருகின்றது. எமது தமிழ் பிரதிநிகள் அத்தகைய மாணவர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும். அந்தவகையில் எமது அடுத்த மாணவர் ஒன்றியமும் மாணவர்களும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும், தேசியம், தாயகம் என்ற பாதையிலேயே பயணிக்கும் என்றார்