ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமன உணவு காணப்பட்டுள்ள நிலையில் 49 நாட்கள் நடுக் கடலில் வசித்து சாதனை படைத்துள்ளார் இந்தோனேசியா இளைஞன்.
மீன்பிடிப்பதற்கென அமைக்கப்பட்டி ருந்த சிறுகுடில் தனது ஆதாரங்களிலி ருந்து விலகி கடலினுள் கிட்டத்தட்ட 1,200 மைல்கள் சென்றுள்ளதால் நடந்த துயர சம்பவவே இது. குறித்த இளைஞன் அப்பகுதியால் சென்ற சரக் குக் கப்பலின் உதவியுடன் மீட்கப்பட் டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இளைஞன், தான் மிகப் பயத்துடன் இருந்த தாககவும், குடிலானது அலையில் ஆட்டங்கண்ட போதெல்லாம் தான் பீறிட்டு அழுததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் மீட்கப்படும் வரையில் 10 கப்பல்கள் தன்னைக் கடந்து சென்ற தாகவும், ஆனால் அவர்கள் தன்னை அவதானித்திருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். 18 – 19 வயது மதிக்கத்தக்க “அடிலாங்” என்ற இளையனே மேற்படி துயரநிலைக்கு ஆளாகிய இந்தோனேசிய இளைஞன் என்பது குறிப் பிடத்தக்க விடயமாகும்.
இளைஞன் மாட்டிக்கொண்ட குடிசையானது இந்தோனேசிய கடற் கரை யிலிருந்து 80 மைல் தொலைவில் கடலினுள் அமைக்கப்பட்டிருந்த மீன்பிடிக் குடிசையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.