ஆப்கானிஸ்தானில் 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ் தான் படைகளிடம் சரணடைந்துள்ளனா். ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை களுக்கும், தலிபான்களுக்கும் இடையே தொடரும் உள்நாட்டு போரை பயன் படுத்தி ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனா்.
ஆனால் அவர்களுக்கும் தலிபான்களுக் கும் இடையே மோதல்கள் நடந்து வந் தது. குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வட க்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகா ணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வந் தது. மற்றொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அழுத் தம் வந்தது.
இந் நிலையில் அங்கு 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆப்கானிஸ் தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளனர். இதுபற்றி வடபகுதி இராணுவ தள பதி முகமது ஹனிப் ரெஸாயீ கூறும்போது, கடந்த காலத்திலும் இப்படி ஐ.எஸ் தீவிரவாதிகள் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த முறை அதன் தலைவர்களில் ஒருவரும், துணைத் தலைவரும் 150க்கும் மேற்பட்டோருடன் சரண் அடைந்துள்ளனா் என்பதுடன் வட பகுதி யில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகத் தெரிவித் துள்ளனா்.