சுவிஸில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை வழங்க முன் வந்துள்ளதாகத் தெரிவித் துள்ளார்.
வடக்கில் எவருமே முன்னெடுக்காத இப் பணியை இவர் கையில் எடுத் துள்ளார். இதன் முதற்கட்டமாக 60 பய னாளிகளுக்கான வீட்டுத் திட்டத்திற் கான காணிகளை யாழ்.கோப்பாயில் வாங்கியுள்ளார்.
பயனாளிகளைத் தெரிவு செய்து விரைவில் 60 பேருக்கான வீட்டுத்திட்டத்தை வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களில் போரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை வழங்குவதற்கான காணிகளை தெரிவு செய்து வாங்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.
இதுவரை காலம் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணத் தில் தியாகி அறக்கொடை நிலையம் ஒன்றை நடத்தி அதனூடாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 வருடங்களுக்கு மேலாக பணம் மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகிறார்.
அதாவது கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு வடக்கில் 300 இற்குமேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார். மேலும் போரால் பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கல்வியைத் தொடர்வதற்கான மாதாந்த பணத்தினை வழங்கிக் கொண்டிருக்கின்றாா்.
மேலும் கணவனை இழந்து குடும்ப தலைமைத்துவத்தைக் கொண்ட பெண் களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வயது முதிர்ந்தவர்களுக்கு மாதாந்த பணக்கொடுப்பனவையும் இலவச மருத்துவ முகாமையும் நடத்திக் கொண்டி ருக்கின்றாா்.
வருடத்தில் 6கோடி பணத்தை மக்களுக்கு வழங்கிவரும் இவர் வீட்டுத் திட் டத்தையும் ஆரம்பித்துள்ளார். தான் பிறக்கும் போது ஒன்றுமே இல்லாது பிறந்ததுபோல தான் இறக்கும் போதும் தன்னிடம் ஒன்றுமே இல்லாது இறக்க வேண்டுமென்ற இவர் தனது தொழிலில் வரும் வருமானம் முழுவதையும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவேன் என உறுதியளித்துள்ளாா்.