தனியார் இதழ் ஒன்றுக்கு அரச குடு்ம்பத்தில் உள்ளவர்களை தான் எவ்வாறு அணுகுவேன் என்பது குறித்து பிரித்தானிய மகாராணி ஒரு சிறு குறிப்பாக எழுதியுள்ளார்.
அதில்,ஒருமுறை சாப்பாட அமரும்போது எனக்கு கொடுக்கப்பட்ட உணவில் இறந்துபோன நத்தை இருந்தது. அதனை சாப்பிட்டீர்களா என்ற கேள்விக்கு, இல்லை எனது பணியாளரை கூப்பிட்டு இதனை சமையலறைக்கு எடுத்து செல்லுங்கள் என கூறிவிட்டேன்.
மிகவும் எளிமையான உணவுகளையே உட்கொள்வேன் என மகாராணி கூறியுள்ளார். 15 வருடங்களாக மகாராணியிடம் சமையல்காரராக பணியாற்றிய Darren McGrady என்பவர் கூறியதாவது, மகாராணிக்கு எப்போதும் உணவுகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
வாரநாட்களில் அவர் காலை 7.30 மணிக்குதான் எழுந்திருப்பார். டார்ஜிலிங் டீ அருந்திக்கொண்டே Radio 4’s இல் அன்றைய நிகழ்ச்சியை கேட்பார்.
அட்டவணையில் குறிக்கப்பட்ட தானியங்களை உணவாக எடுத்துக்கொள்வார். யோகார்ட் விரும்பி சாப்பிடுவார். வெள்ளை பீச் பழங்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம் என பகிர்ந்துள்ளார்.