Loading...
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி திருமணத்திற்கு வரன் பார்த்துத் தரும் ஒரு இணைய நிறுவனத்துடன் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
இந்திய நட்சத்திர வீரர் டோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண தொடர் தான், அவருக்கு கடைசி கிரிக்கெட் தொடர் என்று கூறப்படுகிறது.
Loading...
எனினும் டோனிக்கு விளம்பர வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அதன் ஒரு படியாக தற்போது பாரத் மேட்ரிமோனி எனும் திருமணத்திற்கு வரன் பார்த்துத் தரும் நிறுவனத்தின் விளம்பர தூதராக டோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இணையத்தில் முன்னணியில் இருக்கும் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.
Loading...