Loading...
உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால் அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள்.
அதிலும் இரத்த சோகையானது அடிக்கடி காணப்பட்டால் அது மஞ்சள் காமாலை, புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கும்.
எனவே உடலில் இரத்த குறைவாக உள்ளதா இல்லையா என்பதை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
Loading...
இரத்தசோகை ஏற்படுவதற்கு காரணம்
- உடலில் ரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்படுவதால் ரத்தசோகை ஏற்படலாம். அனீமியா மற்றும் தாலசீமியா, போன்ற பரம்பரை நிலைமைகள், தொற்றுகள், மருந்துகள் போன்றவை ரத்தசோகையை ஏற்படுத்துகிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் இரும்புச்சத்து குறைபாடுள்ள ரத்தசோகை அதிக ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.
- இரும்புச்சத்து குறைவான உணவு உட்கொள்கிறவர்களுக்கு காலப்போக்கில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு இரத்தசோகை ஏற்படலாம்.
- வேறு ஏதேனும் உடல்நலக் குறைவுக்காக மருந்துகள் எடுத்துக் கொள்வதன் காரணமாகவும் ரத்தசோகை ஏற்படலாம்.
இரத்தசோகையின் முக்கிய அறிகுறிகள்
கண்களில் மாற்றம்
- கண்ணின் கீழ் இமையை கீழே நோக்கி இழுக்கும் போது அடியில் உள்ள பகுதியானது சிவப்பு நிறத்தில் இல்லாமல் நிறமற்று காணப்பட்டால் இரத்த சோகை என்று தெரிந்து கொள்ளலாம்.
சோர்வு
- உடலில் சோர்வானது தொடர்ந்து ஒரு மாதமாக இருந்தால் உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
மயக்கம் அல்லது குமட்டல்
- ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதவாறு மயக்கம் அல்லது குமட்டல் போன்றவை ஏற்படும்.
தலை வலி
- உடலில் இரத்தமானது குறைவாக இருப்பதால் மூளைக்கு தேவையான இரத்தம் செல்லாமல் தலை வலியை உண்டாக்குகிறது.
விரல்கள்
- இரத்த சோகை உள்ளவர்களின் விரல்களை அழுத்தினால் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வெள்ளையாகவே இருக்கும். எனவே இதனை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
மூச்சு திணறல்
- இரத்த சோகை இருந்தால் சரியாக சுவாசிக்க முடியாது. ஏனெனில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் இரத்தமானது குறைவாக இருப்பதால், சிறிது தூரம் நடந்தாலும், அதிகமாக மூச்சு வாங்கும
- +
வெளுத்து காணப்படுதல்
- இரத்த சோகை இருந்தால், சருமம் ஒரு மஞ்சள் நிறம் கலந்த ஒருவித வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவ்வாறு இருந்தால் அனீமியா என்று பொருள்.
முடி உதிர்தல்
- இரத்தம் குறைவாக இருந்தால் ஸ்கால்ப்பிற்கு வேண்டிய இரத்த ஓட்டமானது குறைவாக இருப்பதால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், கூந்தல் உதிர ஆரம்பிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
- இரத்தமானது குறைவாக இருப்பதால் உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து அடிக்கடி உடல் நிலையானது சரியில்லாமல் போகும். எனவே இதை வைத்தும் அனீமியா என்று தெரிந்து கொள்ள முடியும்.
எப்படி சரி செய்வது?
- தினமும ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலமும் சரி செய்யலாம்.
- காய்கறிகள், பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்கள், பீன்ஸ், நட்ஸ், அசைவ உணவுகள், இலந்தை, கொடி முந்திரி, உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதன் மூலம் ரத்தசோகையை தடுக்கலாம்.
Loading...