அகதிகள் தொடர்பான ஆவணம் ஒன்று லீக்கானதையடுத்து ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார்.
வெளியான அகதிகள் தொடர்பான ரகசிய ஆவணம் ஒன்று, 2015 ஆம் ஆண்டு அகதிகள் ஜேர்மன் எல்லைக்குள் வராமல் தடுப்பதற்காக, எல்லையை மூடுவதற்கு எவ்வித சட்ட ரீதியான சிக்கல்களும் இருக்கவில்லை என்பதைக் காட்டியுள்ளது ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலை மீண்டும் பெரும் அழுத்தத்திற்குள்ளாக்கியுள்ளது.
FDP கட்சியின் தலைவரான Christian Lindner, வெளியான ரகசிய ஆவணம், மெர்க்கலின் அகதிகள் குறித்த கொள்கைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டத்திற்கு அப்பாற்பட்டு நமது நாடு அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்னும் முக்கியமான முடிவு பொதுமக்கள் முன்னிலையிலும் நாடாளுமன்றத்திலும் விவாதத்திற்கு விடப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் அவர்.
இனி கட்சி தலைவர் பதவிக்கோ ஜேர்மன் சேன்ஸலர் பதவிக்கோ போட்டியிடப்போவதில்லை என அறிவித்து அரசியலை விட்டே ஒதுங்க இருக்கும் நிலையில் ஏஞ்சலா மீது இந்த கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது அவரை கடும் அழுத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறது.