உலக கத்தோலிக்க மதத் தலைவரும் வாடிகனின் தலைவருமான போப் ஆண்டவர், சுவிட்சர்லாந்து ஜனாதிபதியை சந்தித்து சுவிட்சர்லாந்துக்கும் வாடிகனுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
போப் பிரான்சிஸ், சுவிட்சர்லாந்து ஜனாதிபதியான Alain Bersetஐ சந்தித்தபோது கத்தோலிக்க திருச்சபையும் சுவிட்சர்லாந்தும் கொண்டிருக்கும் பல ஒத்த கருத்துகள் மீதான ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுதல், மனிதநேய விதிகளை பாதுகாத்தல் குறித்து பேசிய இரு நாட்டு தலைவர்களும் இவ்விடயங்களை தற்போதைய இலக்குகளான புலம்பெயர்தல், அணு ஆயுத ஒழிப்பு மற்றும் மனிதக் கடத்தல் ஆகிய பிரச்சினைகளில் பயன்படுத்துதல் குறித்தும் பேசினர்.
அத்துடன் தன்னை பாதுகாக்கும் சுவிஸ் மெய்க்காப்பாளர்களின் விசுவாசம் குறித்தும் போப் மெச்சிக் கொண்டார்.
வாடிகனின் தலைவராக இருந்தாலும் போப் ஆண்டவரை பாதுகாப்பது சுவிஸ் வீரர்கள்தான் என்பது, பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்படும் மரபாகும்.
சமீபத்தில் புதிதாக 40 சுவிஸ் வீரர்கள் போப் ஆண்டவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.