பேரறிவாளன் உட்பட 7 பேரை தெரியாது என்று கூற நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்விக்கு 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்று ரஜினிகாந்த் கூறினார்.
7 பேர் யார் என்பது தெரியாது என்று ரஜினி கூறியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க போயஸ் தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை.
கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருபபேன், பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து என கூறியுள்ளார்.