தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தல் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், “நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது நீதிமன்றத்தின் இறுதி முடிவு அல்ல. எதற்காக தேர்தலை பிற்போடுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என தெரியவில்லை.
தேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும் இறுதியில் மக்களே முடிவு செய்வார்கள்” என கூறியுள்ளார்