Loading...
நாடாளுமன்றை நாளை கூட்டுவது தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் சபாநாயகர் கரு ஜெயசூர்ய வெளியிடுவார் என்று சபாநாயகரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் இடைநிறுத்திவைக்க கட்டளையிட்டதையடுத்து நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் ஒழுங்குகள் தொடர்பில் சபாநாயகர் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவரது அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யவுடன் தற்போது பேச்சு நடத்துகின்றனர். நாடாளுமன்றைத் திட்டமிட்டவாறு நாளை கூட்டுமாறு சபாநாயகரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading...
Loading...