பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாரா இணைந்து பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
அண்மையில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சாரா அவரின் அம்மா குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரின் அம்மாவிற்கு ஒரு தூண் போல அர்ச்சனா இருக்கின்றாராம். 36 வருடங்கள் ஒரு தாய்க்கு சிறந்த மகளாக என் அம்மா இருந்திருக்கின்றார்.
நான் அவருக்கு 12 வருட குழந்தைதான் அதனால் இன்னும் எனக்கு சிறந்த தாயாக இருப்பதற்கு அதிக வருடங்கள் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பதிலை கேட்டு அரங்கமே இன்ப அதிர்ச்சியில் அதிர்ந்து விட்டது ஒரு கணம். இதேவேளை, வரலாற்றில் முதன் முறையாக அம்மாவும், 12 வயது குழந்தையும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுதான் முதல் முறை என்றும், பலர் இவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் சகோதரி சாராவிற்கு மறக்க முடியாத பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.