பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
இதற்கான கோரிக்கையை தமது தரப்பினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அரசியலமைப்பு தொடர்பில் சட்டநடவடிக்கைகளை தீர்மானிக்கும் போது 9 பேர் அல்லது 11 பேர் என்ற அடிப்படையில் நீதிபதிகள் காணப்பட வேண்டும் என்பது அவசியமாகும்
நேற்றைய தீர்ப்பு மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினாலேயே வழங்கப்பட்டது. வழக்குடன் சம்பந்தப்பட்ட எந்தவொருவருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்க முடியும்.
நேற்றிரவு (13) மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.