Loading...
இன்று காலை 10 மணிக்கு கூடிய இலங்கை பாராளுமன்றம் கிட்டத்தட்ட 20 நிமிட அமர்வின் பின்னர் மீண்டும் நாளை 10 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வில் , புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மக்கள் விடுதலை முன்னணியால் சமர்பிக்கப்பட்ட நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அமர்வை ஒத்தி வைத்துள்ளார்.
Loading...
இது தொடர்பில் மஹிந்த தரப்பு கூறுகையில் , ரணிலுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தை வைத்து அவர்களுக்கு பக்க சார்பாக பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Loading...