பொருவாக கழுதை என்றாலே கர்ண கடுரமாக கத்தும் என்று தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதன்படி தான் மற்றவர்கள் சத்தமாக கதைத்தால் கழுதைபோல கத்தாதே என்று பேசுகின்றோம்..
ஆனால் அயர்லாந்திலுள்ள மார்ட்டின் ஸ்டான்டன் என்பவரது வீட்டுக்கு அருகில் உள்ள கழுதை ஒன்று இனிமையான குரலில் பாடியுள்ளது. நீண்ட நாட்களாக அவர் இதனை அவதானித்துள்ளார்.
தனக்கு விருப்பமான உணவு கிடைப்பதை தொலைவில் இருந்து அவதானித்துவிடும் அக் கழுதை மிக இனிமையாக ரீங்காரமிட்டு தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒபேரா பாடகியின் குரல்போல் ஒலிக்கும் அதன் குரலை பதிவு செய்வதற்கு அதற்கு விருப்பமான உணவுப் பண்டத்தை எடுத்துச் சென்று மார்ட்டின் அதன் குரலையும் அது பாடும் அழகையும் வீடியோவாகப் பதிவுசெய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் கழுதையின் குரலுக்கு ரசிகர்கள் பெருகிவருகின்றனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வ