நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்தால் நாளை வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சில முக்கிய சம்பவங்கள் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக வெளிவருகின்றன.
முதலில் சபாநாயகர் ஆசனத்தை நோக்கி தண்ணீர், குப்பைகளை வீசிய காணொளி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டு விழுந்த காட்சிகள் மற்றும் மஹிந்த – ரணில் போன்றோரின் செயற்பாடுகளை காணக்கூடியதாக இருந்தது.
அந்த வகையில் தற்போது மஹிந்தவிடம் உரையாடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரை தள்ளிவிட்ட காணொளி வெளியாகி உள்ளது.
இதில் மஹிந்தவைச் சுற்றி டக்ளஸ், பைசர் முஸ்தபா, நாமல் ராஜபக்ஸ, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட பல மஹிந்த அணி ஆதரவாளர்கள் இருந்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்கரணவக்க மஹிந்தவிடம் பேச முற்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் ரொஹான் ரத்வத்த அவரை தள்ளி விட்டுள்ளார்.
சம்பிக்கவை தள்ளி விட்டு ரொஹான் ரத்வத்த அவரை ஏசிய காணொளி வெளியாகி உள்ளது. இதனால் தடுமாற்றமடைந்த சம்பிக்கவை பின்னால் இருந்து நாமல் தாங்கிப்பிடித்தமையும் காணக்கூடியதாக உள்ளது.