திருகோணமலை – மூதூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மூதூர் நீதிமன்ற நீதவான் இம்மாதம் 19 ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று குடும்ப சண்டைகள் காரணமாக மனைவியை தாக்கி காயப்படுத்தியதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபரை ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காயங்களுக்குள்ளான சந்தேகநபரின் மனைவி மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.