16-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 30ம் திகதி, ரபியுல் அவ்வல் 7ம் திகதி, 16-11-2018 வெள்ளிக்கிழமை வளர்பிறை, அஷ்டமி திதி காலை 8:44 வரை; அதன்பின் நவமி திதி, அவிட்டம் நட்சத்திரம் காலை 11:21 வரை அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00-4:30 மணி
* குளிகை : காலை 7:30-9:00 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.
மேஷம்:
எதிர்கால வாழ்வில் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நல்ல செயல்களால் சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு உயரும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். கூடுதல் பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
ரிஷபம்:
உறவினர் அதிக பாசமுடன் நடப்பர். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரம் செழிக்க தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
மிதுனம்:
சிலர் உங்களிடம் சுயநலத்துடன் நெருங்குவர். தொழில், வியாபாரம் செழிக்க நிதான அணுகுமுறையைப் பின்பற்றவும். லாபம் சுமார்.
திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கடகம்:
பிறரது அவதுாறுகளை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம்.
பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் பயன் தராத பொருளை வாங்க வேண்டாம்.
சிம்மம்:
உண்மை, நேர்மையுடன் செயல்படுவீர்கள். சிறிய பணி கூட பலமடங்கு நன்மை தரும். கடந்த காலத்தில் தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும்.
பணம் கொடுக்கல்,வாங்கல் சீராகும். தாயின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
கன்னி:
எந்த செயலையும் மிகுந்த நேர்த்தியுடன் செய்வீர்கள்.தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும்.
லாபம் திருப்திகரமாக அமையும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். பெண்கள் குடும்ப வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
துலாம்:
எளிதான பணி கூட சுமை போல தோன்றும். சகதொழில் வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு கூடாது. அளவான பணவரவு கிடைக்கும்.
நிலுவைப் பணம் வசூலிப்பதில் நிதானம் தேவை. பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர்.
விருச்சிகம்:
பின்விளைவு உணர்ந்து பேசுவது நல்லது. நண்பரிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம்.
பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.
தனுசு:
முன்யோசனையுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும்.
பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மாமன் மைத்துனருக்கு உதவி செய்வீ்ர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
மகரம்:
அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். கடின உழைப்பால் தொழிலில் உற்பத்தி, விற்பனை கூடும். லாபம் சீராக இருக்கும்.
பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதி தரும்.
கும்பம்:
சந்தோஷமான நிகழ்வுகள் அரங்கேறும். சமூகப்பணிகளில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி புதிய அனுகூலம் தரும்.
நிலுவைப் பணம் வசூலாகும். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். பெண்கள் புத்தாடை வாங்குவர்.
மீனம்:
சொந்த நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் சீர்பெற நவீன மாற்றங்களை பின்பற்றுவது நல்லது.
லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். உணவு ஒவ்வாமையால் அஜீரணம் ஏற்படலாம் கவனம்.