ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கான காரணம் தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மற்றும் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக ஆதரவு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மாத்திரம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அறிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் எந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.