Loading...
நாட்டிற்கு சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டுவந்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வந்த விமானத்தில் நாட்டை வந்தடைந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 7 கிலோகிராம் 20 கிராம் எடையுடைய தங்காபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Loading...
இதன்பெறுமதி 43 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர், சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...