நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தினால் அரச சொத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளளது.
எதிரணியினருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் மோசமாக செயற்பட்டமையினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலள்ள மைக்ரோபோன், வாக்கெடுப்பு மின் கட்டமைப்பு, உறுப்பினர்களின் ஆசனங்கள் உட்பட பல சொத்துக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த சேத விபரத்தை மதிப்பிட்டு பழுது பார்க்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அரச சொத்துகளுக்கு மேலதிகமாக நாடாளுமன்ற ஊழியர் சபை மற்றும் பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் பலர் நேற்றைய தினம் காயமடைந்துள்ளனர்.
சபாநாயகர் ஆசனத்திற்கு அருகில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களின் கைக்ரோபோன், மின் உபகரணங்களை உடைக்கும் காட்சி மற்றும் சபைக்கு நுழைந்த பொலிஸாரை தாக்கிய காட்சிகள் நேற்று வெளியாகி இருந்தன.
பொதுவாக நாடாளுமன்றம் ஒரு நாள் கூடுவதற்கான முழுமையான செலவு 20 மில்லியன் ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது.
நேற்றைய வன்முறை சம்பவம் காரணமாக 20 மில்லியன் ரூபாவுடன் மேலும் பல மில்லியன் ரூபா பணம் செலவாகும் என தெரிய வருகிறது.
இதற்கான அனைத்து செலவினங்களும் மக்கள் மீதே சுமத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.