வடகொரியா மக்களுக்கு இருக்கும் கெடுபிடிச் சட்டங்களை விடவும் கிம் ஜோங் யுன்னின் மனைவி பின்பற்ற வேண்டிய சட்டங்கள் மிகவும் கடுமையானவை என கூறப்படுகின்றன.
உலக அரசியலில் திடீர் கவனத்தை ஏற்படுத்திக் கொண்டவர் வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன். அடுத்தடுத்து அணு ஆயுத சோதனை, வல்லரசு நாடுகளுக்கு மிரட்டல், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் என அதிர்வலைகளை ஏற்படுத்திய வடகொரியா மீது கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன..
ஆனால் திடீரென்று அவை அனைத்தையும் ஓரங்கட்டி விட்டு அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு, தென் கொரியாவுக்கு பயணம் என மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் கிம் ஜோங் யுன்.
ஆனால் இன்னமும் வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சியில்
அங்குள்ள மக்களுக்கு இருக்கும் சட்டங்களை விடவும் அவருக்கும்- அவரது மனைவிக்கும் பல கடினமான சட்டங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கிம் ஜோங் யுன்னின் மனைவி மட்டுமல்ல இந்த சட்டத்தை வடகொரிய நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். பெப்ரவரி 16 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய நாட்களில் யாரும் திருமணம் செய்யக்கூடாது.
இந்த திகதிகள் கிம் ஜோங் யுன்னின் தாத்தா மற்றும் தந்தையின் பிறந்த நாட்கள் ஆகும். இந்த நாட்களை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாக கடைபிடித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பின் பெண்களின் பெயரில் சில மாற்றம் ஏற்படுவது உலக வழக்கம். ஆனால் கிம் ஜோங் யுன்னின் மனைவி ரி சோல் ஜூ என்ற தனது மொத்த பெயரையும் மாற்றிக் கொண்டுள்ளார். வடகொரிய அரசு சட்டத்தின்படி இவரது பழைய வாழ்க்கையை முற்றிலும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முடிவாம்.
கிம் ஜோங் யுன்னின் மனைவியால் தனது பெற்றோரை எளிதில் பார்த்துவிட முடியாது. இதற்கு நடுவே பெற்றோர் குறித்த தகவல்களும் இரகசியமாக பாதுகாக்கப்படும். பாதுகாப்பு காரணங்கள் கருதி கிம் ஜோங் யுன் மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகள் மிக இரகசியமாக பேணப்படுகிறது.