தான் சையது அசாருதீனைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா.
சினிமா நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சி தொகுப்பாளர்களும், சீரியல் நடிகைகளும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.
சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் பலர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான். தற்போது அவரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்து வரும் சஞ்சீவ் கார்த்திக்கும், ஆல்யாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்வது போல், இருவரும் இணைந்து வெளியில் சுற்றினார்கள். சேர்ந்து டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா ராணி படத்தில் நஸ்ரியா பேசும் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்திருந்தார். அதில், ‘எஸ்-க்காக’ என அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த எஸ் யார் எனக் கேட்டால், ‘அது சையது அசாரூதின் புகாரி’ என்கிறாராம் ஆல்யா.
தயவுசெய்து அதிர்ச்சியடைந்து விடாதீர்கள்… சையது அசாரூதின் புகாரி என்பது ராஜா ராணியில் சின்னய்யாவாக நடிக்கும் சஞ்சீவ் கார்த்தியின் உண்மையான பெயராம்.