ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த போது முன்னெடுத்து வந்த கிராம உதய திட்டத்தை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை திறைசேரி மீண்டும் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 2,500 கிராமங்களை நிர்மாணிப்பது சஜித் பிரேமதாசவின் இலக்காக இருந்தது.
இந்த இலக்கை 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய அவர் திட்டமிட்டிருந்தார். அத்துடன் 2019ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மேலும் 1,673 கிராமங்களின் நிர்மாணிப்பு பணிகளை அவர் ஆரம்பிக்கவிருந்தார்.
தினமும் மூன்று கிராமங்கள் என்ற வகையில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 2,500 கிராமங்களை திறந்து வைக்க சஜித் பிரேமதாச திட்டமிட்டிருந்தார்.
அத்துடன் 2020ஆம் ஆண்டு மேலும் 5,000 கிராமங்களை நிர்மாணிக்கும் திட்டத்தை ஆரம்பிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் விமல் வீரவங்ச வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.