Loading...
- சபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்படாவிடில் சபாநாயகர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற எந்த செயற்பாடும் சட்டரீதியாக இடம்பெறவில்லை. இந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் சபாநாயகர் தாமாகவே பதவி விலக வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஆளும் கட்சியினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று காலை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
Loading...