பாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும் அதனூடாக சிறந்த படிப்பினைகளை கற்றுக்கொண்டுள்ளன.
எனினும் இலங்கை சபாநாயகரின் செயற்பாடுகள் அவற்றை விடவும் மோசமானதாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தின பாராளுமன்ற அமர்வில் எதிர்கட்சிக்குரிய வாயிலூடாக செங்கோல் எடுத்து வரப்பட்டு, அது உரிய இடத்தில் வைக்கப்படாததோடு, பெயர் மூல வாக்கெடுப்பு நடத்துவதாகக் கூறி, மீண்டும் குரல் மூலமான வாக்கெடுப்பே நடத்தப்பட்டது.
எனவே தான் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன, தான் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் என்றார்.
பொது ஜனபெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.