- மாலைதீவு ஜனாதிபதியாக இம்ராஹிம் முகமது சோலி நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்சவும் செல்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை. நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். அத்துடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் மஹிந்த ராஜபக்சவிற்கு உயரிய மதிப்பளிக்கப்பட மாட்டாது என்ற தகவல் கிடைத்ததன் பின்னரே, மஹிந்த அந்த பயணத்தை இரத்து செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கை அரச தரப்பு, மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு உரிய முக்கியத்துவம் வழங்காமல், இலங்கையிலிருந்து கலந்து கொண்டிருந்த இன்னொரு பிரதிநிதியான சந்திரிகா குமாரதுங்கவிற்கு பெரும் மரியாதையும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் முன்வரிசையில்- சந்திரிகா, மாலைதீவு ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் உட்கார்ந்திருந்தனர்.
Loading...இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பார்வையாளர் வரிசையிலேயே உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.
நரேந்திர மோடியை சந்தித்து பேச இலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம கடுமையான முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை.
அண்மையில் இலங்கையில் அரசியல் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு, பெரும்பான்மை பலமில்லாத அரசு பதவியேற்றிருந்தது. இதை சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தவிர்ந்த வேறு எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் இலங்கைக்கு அது உணர்த்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் மோடி- முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சந்திரிகா மீளவும் களத்தில் இறக்கப்படுவதற்கான முன்னோட்டமாகவும் இது இருக்கலாமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2015இல் அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்புவதில் சந்திரிகா முக்கிய பங்காற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகாவிற்கு ராஜ மரியாதை…
Loading...
Loading...