சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கான பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதற்கான கால எல்லையை ஜனாதிபதி அதிகரித்துள்ளார்.
அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் பெரும்பான்மை நிரூபித்துக் காட்ட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னர் வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு தற்போது 48 மணி நேரமாக நீடிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பசில் ராஜபக்சவிடம், மைத்திரி தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுதந்திர கட்சி உறுப்பினர்களை அழைத்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக உறுப்பினர்கள் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வழமையை விடவும் பெருந்தொகை பணத்தை கொடுத்து உறுப்பினர்களை தம்வசம் இழுக்கும் செயற்பாட்டில் மஹிந்த தரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் கட்சி தாவும் ஒரு உறுப்பினருக்கு 60 கோடி ரூபாய் என்ற பேரம் பேசப்பட்டது. எனினும் தற்போதைய நிலையில் அது பல மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பு அரசியல் கட்சித் தாவல்கள் தீவிரமான இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது.