இலங்கையில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வித்தியாசமான வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
1945 ஆண்டு பிறந்த மஹிந்த ராஜபக்ச இம்முறை தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
பிறந்த நாளை முன்னிட்டு வருடாந்தம் இடம்பெறும் புண்ணிய தான நிகழ்வுகள் இம்முறையும் அபயராம விகாரையில் இடம்பெற்றது.
அத்துடன் மஹிந்தவின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் அஜித் பீ பெரேரா மஹிந்தவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்தில் “எங்களுக்கு மிளகாய் பொடி அடித்த மஹிந்த ராஜபக்ச அவர்களே! உங்களுக்கு 73 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.