கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவாமூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் ராஜீவ்காந்தி.
திருமணமான இவர் பண்ருட்டியிலுள்ள தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியை பள்ளிக்குச் செல்லும் வழியில் மறித்து தன்னுடன் வருமாறும் இல்லை என்றால் தம்பி, தங்கையை கொன்று விடுவதாக மிரட்டி மோட்டார் சைக்களில் கடத்தி சென்றுள்ளார்.
அப்போது மாணவி பயத்தில் அழுதுள்ளார். அதனை பார்த்தவர்கள் ஏன் என்று விசாரிக்கையில் பள்ளிக்கூடம் செல்வதற்கு பயந்து மாணவி அழுவதாகக் கூறி சமாளித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளிலேயே மாணவியை திருப்பதிக்கு அழைத்துச் சென்று அங்கு கோயிலின் முன்பாக கட்டாய தாலி கட்டியுள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து, ஒகேனக்கலுக்கும் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் பெண்ணின் பெற்றோர் பண்ருட்டி காவல் நிலையத்தில் மகளை காணவில்லையென புகார் அளித்தனர். காவல்துறை விசாரணைக்கு பிறகு, இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் குற்றவாளி ராஜீவ்காந்தி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஆசிரியர் ராஜீவ் காந்திக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.