சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டில் பல்வேறு நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட அகதிகளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு வழியே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த 2013ல் முதல் நடைமுறையில் உள்ள கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையின் கீழ் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றவர்களை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட 78 நடவடிக்கைகளில் 2,525 தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய உள்துறையிடம் பெறப்பட்ட தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடங்கியது முதல் ஆகஸ்ட் மாதம் வரை எடுக்கப்பட்ட 10 நடவடிக்கைகளில் 297 பேர் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த படகுப்பயண முயற்சிகள் இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து முயற்சிக்கப்பட்டுள்ளது.
அதே போல், கடந்த செப்டம்பர் 2013 முதல் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 614 பேர் கைதாகியுள்ளனர்.
மேலும் அதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடந்துள்ளன. இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சிகளை ஈழத்தமிழ் அகதிகள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.