பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆடு ஒன்று குட்டி போட்டதில் அதில் ஒரு குட்டி மட்டும் பார்ப்பதற்கு பாதி மனிதன், பாதி பன்றி போன்று இருந்ததால், ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிலிப்பைன்சின் Sultan Kudarat(40) பகுதியைச் சேர்ந்தவர் Josephine Repique. இவர் தன்னுடைய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்க்கும் ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போடும் தருவாயில் இருந்துள்ளது.
இதனால் அவர் தன்னுடைய ஆட்டை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிசேரியன் மூலம் இரண்டு குட்டிகள் பிறந்துள்ளது. அதில் ஒரு குட்டி நன்றாக இருந்த நிலையில், மற்றொரு குட்டி பாதி மனிதன், பாதி பன்றி போன்று இருந்துள்ளது.
இதைக் கண்ட ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆட்டின் உரிமையாளர் கூறுகையில், முதலில் ஒரு குட்டி நன்றாக இருந்தது. அடுத்த குட்டியை பார்த்த போது அது ஆட்டு குட்டி போன்றே இல்லை, வித்தியாசமாக இருந்தது. சொல்லப்போனால் பாதி மனிதன், பாதி பன்றி போன்று இருந்தது. முதலில் நன்றாக பிறந்த குட்டியும், இந்த குட்டியும் சில மணி நேரங்களில் இறந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் Institute of Animal Science of the University மருத்துவர் Agapita கூறுகையில், இது தாய் ஆட்டின் கருப்பையில் இருந்த மரபணு மாற்றமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் இது ஒரு வகை பிசாசு என்று கூறி வருகின்றனர்.