22-11-2018 வியாழக்கிழமை விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 6-ம் நாள். வளர்பிறை சதுர்த்தசி திதி நண்பகல் 12.53 மணி வரை பிறகு பௌர்ணமி. பரணி நட்சத்திரம் மாலை 6.31 மணி வரை பிறகு கிருத்திகை.
யோகம்: சித்தயோகம் மாலை 6.31 மணி வரை பிறகு மரணயோகம். நாளை அதிகாலை திருவண்ணாமலை பரணி தீபம்.
நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.
குளிகை: 9:00 – 10:30.
சூலம்: தெற்கு.
பொது: திருவக்கரை வக்ரகாளியம்மன் ஜோதி தரிசனம், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவச திறப்பு.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றிஉழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள்.
உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மிதுனம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். இனிமையான நாள்.
கடகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்செய்வீர்கள்.
பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
சிம்மம்
கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
உடல் நலம் சீராகும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் நீங்கும் நாள்.
கன்னி
சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். அநாவசியப்பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்பி ஏமாறவேண்டாம்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
துலாம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவு பெரு கும். வாகனப்பழுதை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
விருச்சிகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.
பொதுக் காரியங்கள் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
தனுசு
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.
மகரம்
பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கும்பம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடிவருவார்கள்.
வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும்நாள்.
மீனம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும்.நீண்ட நாள் பிரச்னைகளுக்குதீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.
விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.