யாழில் கடுமையான போதை தலைக் கேறிய நிலையில் தந்தையொருவர் தனது ஐந்து வயது மகனை கண்மூடித்தனமாக கொடூரமாக கடித்துள்ளார்.
கடிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுவன் கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்கள் காணப்படுகின்றன.
குறித்தசம்பவம் யாழ் இணுவில் பகுதியில் தந்தையினால் மகனுக்குமிக கொடூரமாக நடத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து, சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசரணைகளின் பின்னர் இன்று அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதோடு, தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.