இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருக்கும் தொடருந்துத் தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக என தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அந்த தொகுதியில் இரண்டு தொடருந்து இயந்திரங்களும், ஒருதொகுதி பெட்டிகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தொடருந்து தொகுதியின் முதலாவது பரீட்சார்த்த பயணம் கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் எஞ்சிய தொடருந்து தொகுதிகளும் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையில் தொடருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தொடருந்துத் திணைக்களத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர் புதிய கட்டணங்களுக்கு அமைய புதிய பயணச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.