ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என ஜெனிவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இன்று அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் ‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும் தலைப்பில் சற்று முன்னர் ஆரம்பமான மாநாட்டில் மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் “தற்போதைய இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதுடன், பொது தேர்தல் ஒன்று செல்வதே” என மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று 22 மற்றும் நாளை 23 ஆம் திகதி வரையில் இடம்பெறும் இந்த விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.