இன்றைய காலத்தில் கனவன் மனைவிக்குள் பல பிரச்சனைகள் சந்தேகங்கள் என வாழ்க்கையை பலர் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிலும், சிலர் நம் மனைவிக்கு நாம் நல்ல கணவனாக இருக்கிறோமா? அவளுக்கு நம்மை பிடித்துள்ளதா என தங்களுக்குள்ளாகவே கேள்விகளை எழுப்பி வேதனைப்படுவர்.
அவர்களுக்கான பதிவு தான் இது.. உங்க மனைவிக்கு கீழே கொடுக்கப்பட்ட தலைப்பிற்கெல்லாம் உங்கள் மனதில் ஆம்/இல்லை என விடை அளித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் 10 மதிப்பெண்கள்.
நீங்கள் கொடுக்கும் பதிலை வைத்து மதிப்பெண்களை கணக்கிட்டு கொள்ளுங்கள். 80 மதிப்பெண்களுக்கு மேல் வருகிறதென்றால் கண்டிப்பாக நீங்க உங்க மனைவிக்கு பிடித்த மிகவும் நல்ல கனவராக தான் இருப்பீர்கள்.
லாங் ரைடு!
உங்க மனைவி மன சோர்வாக இருக்கும் போது பைக் இல்ல கார்ல லாங் ரைடு கூட்டி சென்றதுண்டா…? கார், பைக் இல்லை என்றாலும், அவருடன் கைகோர்த்து சாலை ஓரம் ஒரு மாலை வேளையில் நடந்து சென்றுள்ளேன் என்றாலும் கூட பரவாயில்லை அது பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.
மாதவிடாய் நாட்கள்!
உங்க மனைவிக்கு மாதாமாதம் அந்த மூன்று நாட்கள் முடியாமல் போகும். அந்த நாட்களில் அவர்கள் எதிர்கொள்ளும் முழுமையான வலியை அவர்களும் கணவரிடம் கூற மாட்டார்கள். அவர்கள் கூறினாலும் கணவர்களுக்கு அது முழுமையாக புரியாது. ஆனால், அவர்கள் வலியில் முடியாமல் தவிக்கிறார்கள் என்பதை உணர்ந்து வீட்டு வேலைகளை நீங்களாக எடுத்து செய்ததுண்டா?
மேலும், எப்படியும் அடுத்த மாசமும் உங்கள் மனைவிக்கு மாதவிடாய் வரும் என்று தெரியும், அதை முன்கூட்டியே அறிந்து அவருக்கு உதவும் வகையில் கூடுதலாக நாப்கின் வாங்கி வீட்டில் வைத்ததுண்டா. அல்லது அவர் வேண்டும் என்று கேட்ட தருணத்தில் உடனே சென்று வாங்கி வந்துக் கொடுத்ததுண்டா?
வார இறுதி சமையல்!
வாரம் முழுக்க அவள் தானே சமைக்கிறாள், வார இறுதியில், குறைந்தபட்சம் ஞாயிறு மதிய உணவாவது சமைத்துக் கொடுத்தது உண்டா…? சமைக்க தெரியாது ஆனால் காய்கறி நறுக்கி தருவேன். என்னால் முடிந்தது அல்ல தெரிந்ததை தானே செய்ய முடியும் என்று கூறும் கணவர்கள் இரண்டரை மதிப்பெண் போட்டுக் கொள்ளலாம்…
சொந்த விருப்ப, வெறுப்பு!
உங்கள் மனைவியின் சொந்த விருப்ப, வெறுப்பை உங்களது விருப்ப, வெறுப்பு காரணத்திற்காக தடை விதிக்காமல். எனக்கு பிடிக்காட்டி என்ன, உனக்கு பிடிச்சிருக்குல நீ பண்ணு என்று ஊக்கவித்தது உண்டா?
தோழிகளுடன் அவுட்டிங்!
நீங்கள் எப்படியும் நினைக்கும் போதெல்லாம் பொய் சொல்லிவிட்டாவது நண்பர்களை கண்டு வந்துவிடுவீர்கள். ஆனால், அவர்கள் தோழிகளை காண வேண்டும் என்று கேட்கும் போது, அதெல்லாம் வேண்டாம், வேணும்னா வீட்டுக்கு அழைத்து பேசு என்று கோபப்படாமல், பார்த்து போயிட்டு வா, ஏதாவது ஹெல்ப் வேணுமா என்று கேட்டதுண்டா? அல்லது அவர்கள் வெளியே சென்று வர ஏதனும் ஐடியாக்கள் பகிர்ந்துக் கொண்டதுண்டா?
ஆளுமை!
என்னை விட என்னோட மனைவிக்கு ஆளுமை திறமும், வீட்டு மேலாண்மை திறனும் அதிகம். அதனால, அவதான் எல்லாத்தையும் கரக்டா பார்த்து பார்த்து பண்றா என்று… அவரிடம் கூறாவிட்டாலும், உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கூறி மகிழ்ந்துக் கொண்டதுண்டா?
பாராட்டு!
உங்கள் மனைவி செய்யும் விஷயங்கள், அவர் வேலையில் சாதித்த விஷயங்களுக்கு பாராட்டியதுண்டா? சில கணவர்கள், ஊரே தனது மனைவியை பாராட்டினாலும், இவர்கள் அடுத்த வேளைக்கு என்ன சோறு என்று கேட்டு மனம் நோக செய்வார்கள். இப்படி எல்லாம் இல்லாமல் நான் வாய் நிறைய பாராட்டியுள்ளேன் என கூறும் நபரா நீங்க…?
உங்கள் மனைவி தவறு செய்த போது, அதற்கு அவரை திட்டாமல், தட்டிக்கொடுத்து இது தவறு, இதை இப்படி தான் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளீர்களா? இல்லையேல், ஒரு தோல்வியில் உங்கள் துணை மனம் நொந்து காணப்பட்டால், அதில் இருந்து மீண்டு வர உதவியது உண்டா?
தாம்பத்தியம்!
உங்கள் மனைவியை தாம்பத்திய உறவில் ஈடுபட வற்புறுத்தியது இல்லை, எனக்காக அவரது விருப்பம் இன்றி கட்டாயப்படுத்தியது இல்லை? தாம்பத்திய உறவில் அவரது விருப்பத்திற்கு எதிராக நடந்துக் கொண்டதில்லை என்று கூறும் நபரா நீங்க?
மன்னிப்பு!
ஏதேனும் சண்டையின் போது, அவரை அழவைத்து.. பிறகு தவறு உங்கள் மீது தான் என்று அறிந்து தயங்காமல் மன்னிப்பு கேட்டதுண்டா… இல்லை தவறு அவள் மீது என்றும் அறிந்தும் கூட, அவர் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாமல்… நாமே மன்னிப்பு கேட்போம்.. குடியா மூழ்கிவிடும் என்று கருதி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது உண்டா?
பிடித்தவை!
நிச்சயம் இல்லற உறவின் ஆரம்பத்திலேயே உங்கள் மனைவிக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது என்று அறிந்திருப்பீர்கள். சிலர் சில வருடங்களில் மறந்தும் இருப்பீர்கள். ஆனால், எப்போதும் அவளுக்கு பிடித்தவற்றை எங்காவது கண்டால் அவளுக்கு வாங்கி தர மறந்ததே இல்லை எனும் கணவரா நீங்கள். பிடித்தது என்பது புடவை நகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பானிப்பூரி, மசால் வடையாக கூட இருக்கலாம். வாங்கி கொடுத்திருக்கீங்களா?
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்ன்னு எல்லாம் சொல்றதுக்கு இது பெப்சி உங்கள் சாய்ஸ் இல்ல. வரும் நாட்களில் இன்னும் உங்கள் மனைவியை நன்கு புரிந்து நடந்து கொண்டால் இல்வாழ்க்கை இப்போது இருப்பதை காட்டிலும் பலமடங்கு இன்பம் நிறைந்து காணப்படும்.