ஈட்டோபிக்கோ பகுதியில் நேற்று இரவு ஆண் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Martin Grove வீதி மற்றும் Eglinton Avenueவில் அமைந்துள்ள உயர் மாடிக் கட்டிடம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், நேற்று இரவு 11 மணிக்கு பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது காவல்துறையினருடன் தொடர்புபட்ட விவகாரமாக உள்ள நிலையிலேயே மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு சில புலனாய்வு உத்தியோகத்தர்கள் அந்த பகுதியில் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், நபர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது மேற்காள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த அநத நபர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானதாகவும், சுவாசித்தவாறும், சுயநினைவுடனும் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், அவர் காவல்தறையினரின் காவலின் கீழ் உள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.