Loading...
- மார்க்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 71 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவமானது கல்பிரித் க்ரெஸ்ஸன் பகுதி ப்ரிம்லே ரோட் மற்றும் டெனிசன் ஸ்ட்ரீட்க்கு அருகே நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இதன் பின்னர் தீவிபத்திற்கு உள்ளான குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
Loading...இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி சில மணிநேரங்களிலேயே உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...