தமிழ் மக்களின் உரிமைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீர ர்களை நினைவுக்கூருவதை எவராலும் தடுக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோவின் மூத்த தலை வர்களில் ஒருவரான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தை அனுட்டிப்பதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோப் பாய் பொலிஸார் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான தீர்ப்பை யாழ் நீத வான் நீதிமன்றிம் நாளை மறு தின மான நவம்பர் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் இவ்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அணி திரள வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை அச்சமின்றி மக்கள் மாவீரர் நாளை அனுட்டிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர்,
இதன் மூலம் எந்த தடைகள் வந்தாலும் மாவீரர் தினத்தை சிறப்பாக அனுஸ்டிக்கலாம் எனவும் மக்கள் விடுதலை முன்னணியால் கார்த்திகை வீரர்கள் தினம் அனுஷ்டிக்க முடியும் என்றால் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய மாவீரர் தினத்தையும் அனுஷ்டிக்க முடியுமெனத் தெரிவித்துள் ளாா்.
ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் பறிபோய்விட்டதாக தற்போது கவலை வெளியிட் டுவரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், ஐ.நா சபையும் ஏற் கனவே சிறிலங்காவின் ஜனநாயக விரோத செயல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இவ்வாறான நிலை ஒன்று உருவாகியிருக்காது என்றும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து தற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என் றும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்தற்கு அமைய பயங்கவாத தடுப்பு சட் டத்தை நீக்குவதற்கான அழுத்தத்தை சர்வதேசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள சிவாஜிலிங்கம், இதன்மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் நம் பிக்கை வெளியிட்டார்.
ஸ்ரீலங்காவில் ஆட்சியில் யார் இருந்தாலும் மக்களுக்கு கவலை இல்லை என்ற நிலையில் நிபந்தனைகளின்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங் கியமை தவறு என்பதே தனது உறுதியான நிலைப்பாடு என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளாா்.