கனடாவில் இளம்பெண் ஒருவர் கோரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது அவளை துஷ்பிரயோகம் செய்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாகவும் ஒருவரையொருவர் அவளை வன்புணர்வு செய்ய உற்சாகப்படுத்தியதாகவும் ஒரு இளம்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த சாரா என்னும் இளம்பெண், தன்னை Fanning (19) என்னும் இளைஞன் தனியாக சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததையடுத்து அவனை சந்திப்பதற்காக சென்றாள்.
அவன் மீது தனக்கு ஆசை இருந்ததாகத் தெரிவிக்கும் சாரா, Fanning, El-Sakaan மற்றும் பெயர் வெளியிடப்படாத இன்னொரு இளைஞன் ஆகியோருடன் அவர்களில் ஒருவரது வீட்டுக்கு சென்றிருக்கிறாள்.
அந்த வீட்டின் பேஸ்மெண்டில் அவர்கள் இருக்கும்போது மதுபானம் அருந்திய அந்த இளைஞர்கள் அவள் வாயிலும் கட்டாயப்படுத்தி மதுபாட்டிலை திணித்து அவளை மதுவருந்த வைத்துள்ளார்கள்.
பின்னர் Fanning அவளுடன் பாலுறவு கொள்ள முயல, அவள் மறுத்திருக்கிறாள்.அவர்கள் மூவர் இருந்ததால் அவளை எளிதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மூவரும் மாறி மாறி அவளை வன்புணர்வு செய்திருக்கிறார்கள். அத்துடன் விடாமல் அவளது பெண்ணுறுப்புக்குள் மின்சாரத்தால் இயங்கும் பிரஷ் ஒன்றை நுழைக்க, வலி தாங்காமல் கதறியிருக்கிறாள் அவள்.
அவளை அடித்து உதைத்ததோடு, மோசமான வார்த்தைகளாலும் அழைத்து, தொடர்ந்து மூவரும் அவளை துஷ்பிரயோகம் செய்தபின் தன்னை வீட்டில் கொண்டு விட்டு விடுமாறு சாரா கெஞ்ச, அவளை அவளது வீட்டின் முன் விட்டுச் சென்றிருக்கிறார்கள் மூவரும். வீடு சென்ற சாரா, பெற்றோரிடம் கதற, அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.
பொலிசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில், அவர்கள் முன்னிலையில் சாரா சாட்சியமளித்ததோடு, அவளை துஷ்பிரயோகம் செய்யும்போது அவர்கள் எடுத்த வீடியோக்களும் நீதிபதிக்கு காட்டப்பட்டன. மேலும் அவர்கள் மீதான விசாரணை மீண்டும் இன்று தொடர்கிறது.