பிரான்ஸின் ஆறு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தென்கிழக்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Météo வானிலை ஆய்வு மையம் முன்னதாக 5 தென்கிழக்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது அதை ஆறு மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.
Ardèche (07), Alpes-Maritimes (06), Bouches-du-Rhône (13), Gard (30), Hérault (34), Var (83) ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆறுகள் நிரம்பி வழிய கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அருகிலுள்ள மாவட்டங்களான Ardèche, Hérault மற்றும் Gard ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பொழியக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.