தனியாக வீட்டில் இருந்த இளம்பெண்ணை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அதை விடியோ எடுத்து மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஜஃபார் நகரைச் சேர்ந்தவர் 22 வயதுடைய பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில், பானு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை வேவுபார்த்த மூன்று காமுகர்கள் வீட்டினுள் அதிரடியாக நுழைந்து கதவை தாழிட்டு, ஒருவர் பின் ஒருவராக பானுவை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்தது மட்டும் இல்லாமல் அதை விடியோ எடுத்து இந்த விசயத்தை வெளியே யாரிடமாவது சொன்னால், உன் மானம் சமுக வலைதளங்களில் சந்தி சிரிக்கும் என கடுமையாக மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து, பானு தனது தாயரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி கதறி அழுதுள்ளார். இதையடுத்து பானுவின் அம்மா ராம்பூர் லோகாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காமுகர்கள் மூவரையும் வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது