பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிளாலி கிராமத்திற்க்கான பிரதான வீதி முப்பது வருடங்களுக்கு பின்னர் நேற்று புனரமைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் ஆரம்பிக்கப்பட்டது.
மிகவும் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்ட இவ்வீதியால் போக்குவரத்து செய்ய மிகவும் கஷ்டப்பட்ட மக்கள் குறித்த பிரச்சனை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அவரின் வேண்டுகோளிற்கு அமைய வீதி அபிவிருத்தி திணைக்களம் 1.25 KM நீளமான வீதியை புனரமைக்க10.2 மிலியன் ரூபாய் ஒதிக்கியுள்ளது .
குறித்த பனியின் ஆரம்பநிகழ்வை இன்று பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உபதவிசாளர் கஜன் உறுப்பினர்களான கோகுல்ராஜ்,
வீரபாகுதேவர், ரமேஸ் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் கிராம அலுவலர்களான பிரபாகரன்,சாந்தன், மற்றும் பொது அமைப்புக்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.