நடிகை மஞ்சுமா மோகன், கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் உடல் எடை அதிகரித்திருந்த நிலையில் படவாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது.
சாப்பாடு பிரியரான இவர் சில மாதங்களாக உணவு கட்டுப்பாடு இருந்து தனது உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள மஞ்சுமா மோகன் அதில் சற்று ஒல்லியாக காணப்படுகின்றார்.
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சுமா மோகனுக்கு விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த இரு படங்களில் நடித்த போதே சற்று உடல்பருமனக இருந்ததால் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அது மட்டும் இல்லை உடல் எடை குறைந்தமையால் அவரின் கண்ணத்தில் விழும் அழகிய குழிகள் மறைந்து விட்டது. இதனை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படி ஒரு பரிதாப நிலையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.