ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரத மராக்கும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் துணை போகாதென அக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் தலை வரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித் துள்ளாா்.
சிறிலங்காவின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை அதிரடி யாக நீக் கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நிய மித்துள்ளாா்.
இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது என்று குற்றம் சாட்டிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மஹிந்தவின் நியமனத்திற்கு எதிராக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தி லும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
அதேவேளை நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டு மைத்ரி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக் கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும் கூட்டமைப்பு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு சம்பந்தன் தலைமையிலான கூட் டமைப்பினர் முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக் கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்றைய (26) தினம் வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொ ன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசியக் கூட் டமைப்பு மீதான இக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், ரணில் விவகாரத் தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளாா்.