நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. பாலிவுட் நடிகையான இவருக்கு வாய்ப்புகள் பெரியளவில் இல்லை. ஒரு பக்கம் வெளிநாட்டு காதலுடன் ஜாலியாக லைஃபை அனுபவத்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் பிகினியில் கவர்ச்சி புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்கள் ஈர்த்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருக்கிறார் என புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
ஆனால் இது வதந்தி. இது பற்றி மனக்கவலையுடன் அவர் பதிவையும் வெளியிட்டுருந்தார். இந்நிலையில் அவருக்கு அண்மையில் தெலுங்கில் ராம் சரண் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட இலியானாவுக்கு வாய்ப்பு வந்தது.
ஆனால் அவர் ரூ 60 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர்கள் வேறு நடிகைகளை தேடி வந்தார்கள். தற்போது இளம் நடிகை கேத்ரின் தெரசாவை ஓகே செய்துவிட்டார்களாம்.
வரும் டிசம்பர் 10 ம் தேதி பாடல் ஷூட்டிங் செய்யப்படுகிறதாம்.